இன்றைய நவீன உலகில், முதியோர்களை முதியோர் இல்லங்களில் விட்டுச் செல்லும் போக்கு அதிகரித்திருக்கும் சூழலில், இதயம் நெகிழும் வகையிலான ஒரு நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மருமகள் ஒருவர் தனது மாமியாரைச் சுமந்து கொண்டு 84 கோஸ் பரிக்ரமா எனப்படும் புனிதப் பயணத்தை மேற்கொண்டுள்ளது பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

“>

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தன்னுடைய மாமியாரைச் சுமந்து கொண்டு நீண்ட தூரம் நடப்பது என்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகப்பெரிய சவாலாகும். மாமியாரின் ஆசையை நிறைவேற்றவும், அவருக்குச் செய்யும் மரியாதையாகவும் இந்தப் பயணத்தை அந்த மருமகள் மேற்கொண்டிருப்பது, இன்றைய தலைமுறைக்கு ஒரு சிறந்த முன் உதாரணமாக அமைந்துள்ளது. குடும்ப உறவுகளின் மேன்மையையும், பாராட்டுக்குரியது.