சென்னை சென்ட்ரலில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 15 ரயில்கள் டிசம்பர் 7 இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் மற்றும் ஸ்ரீ மாதா வைணவ தேவி அந்தமான் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் – விஜயவாடா, மைசூர் வந்தே பாரத், சென்னை சென்ட்ரல் – மைசூரு, கோவை சதாப்தி, விஜயவாடா ஜன் சதாப்தி, சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு வந்தேன் பாரத், பெங்களூரு டபுள் டக்கர், பெங்களூரு பிருந்தாவன், சென்னை சென்ட்ரல் மற்றும் திருப்பதி விரைவு ரயில்கள் உட்பட 15 ரயில்கள் என்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.