புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும் நாளையும் விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி விடுதலை தின கொண்டாட்டம் மற்றும் கல்லறை திருவிழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று புதுச்சேரி கடற்கரையில் நடைபெறும் நிலையில் நாளை கிறிஸ்தவர்கள் கல்லறை திருவிழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.