இந்திய வனத்துறையில் காலியாக உள்ள officers பணியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் யுபிஎஸ்சி தேர்வாணையத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் UPSC IFS தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அதன்படி 2023 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட 150 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் இந்த தேர்வின் முதல் கட்ட முதல் நிலை தேர்வு மே மாதம் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த தேர்வின் அடுத்த கட்டமான முதன்மை தேர்வுக்கு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் வருகின்ற நவம்பர் மாதம் 26ம் தேதி தொடங்கப்பட்டு டிசம்பர் மூன்றாம் தேதி வரை நடைபெற உள்ளதாக யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்த தேர்வு காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.