இந்தியாவில் இன்று முதல் சிலிண்டர் விலை , எல் ஐ சி பாலிசி மற்றும் வங்கி விடுமுறைகள் என பல நிதி சார்ந்த விஷயங்களில் பெரிய மாற்றம் வர உள்ளது . அதன்படி ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து சிலிண்டர் விலை தீர்மானம் செய்யப்படும் நிலையில் இன்று சிலிண்டர் விலை உயர வாய்ப்புள்ளது .

அதே சமயம் இன்று முதல் ஜிஎஸ்டி தொடர்பான விதிமுறைகளும் மாற்றம் அடைகிறது. அதாவது 100 கோடி அல்லது அதற்கு மேல் வியாபாரம் செய்யும் வணிகர்கள் இ சலான்  போர்ட்டலில் ஜிஎஸ்டி சலானை 30 நாட்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

எல்ஐசி பாலிசிகள் ஏதாவது நிறுத்த செய்யப்பட்டிருந்தால் அதனை இன்று முதல்  தொடங்க வாய்ப்பு கிடையாது. அதே சமயம் இன்று முதல் ஈக்விட்டி டெரிவேடிவ் பிரிவில் பரிவர்த்தனை கட்டணம் அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது