திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்கலை மற்றும் அதன் கீழ் உள்ள உறுப்பு கல்லூரிகளில் டிசம்பர் 11ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் குறித்த அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.