சேலம் மற்றும் கோவை பேசஞ்சர் ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை மாதம் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம் மற்றும் ஈரோடு மார்க்கத்தில் தண்டவாள சீரமைப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக இயக்கப்படும் சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கோவை மற்றும் சேலம் ரயில், சேலம் மற்றும் கோவை ரயில் ஆகியவை இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே பெங்களூரு மற்றும் கொச்சு வேலை சிறப்பு ரயில் இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரையில் புதன்கிழமைகளில் குறிப்பிட்ட இந்த மார்க்கத்தில் 25 நிமிடம் தாமதமாக இயக்கப்படும் என்ற தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.