தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் கனமழையும் இரண்டு மாவட்டங்களில் மிக அதிக கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அலர்ட் கொடுத்துள்ளது.

அதன்படி நீலகிரி மற்றும் கோவையில் மிக கனமழையும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை  ஆகிய மாவட்டங்களில் கனமழையும் வெளுத்து வாங்கும். மலையை பொறுத்து நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தெரிகிறது.