இந்தியாவில் உள்ள குடிமக்களுக்கு அடையாள ஆவணமாக ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த  மாதம் முதல் இந்திய குடிமக்கள் பிறப்புச் சான்றிதழையும் அடையாள சான்றாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது ஓட்டுநர் உரிமம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை என அனைத்து தேவைகளுக்கும் பிறப்புச் சான்றிதழை அடையாளச் சான்றாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதே சமயம் பிறப்புச் சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்த அனுமதிக்கும் புதிய மசோதா அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிறந்த தேதி குறித்து ஆவணங்கள் தேவைப்படும் பட்சத்தில் ஆதார் கார்டு போன்ற எந்த ஆவணங்களையும் வழங்காமல் பிறப்புச் சான்றிதழை வழங்கினால் மட்டுமே போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.