திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக புரட்டாசி மாதத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருப்பதால் இலவச சர்வ தரிசன டிக்கெட்டுகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் இலவச தரிசனத்திற்கு 7 கிலோமீட்டர் தூரம் வரை மக்கள் காத்திருப்பதால் இலவச சர்வ தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.