சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு புகைப்படம், வறுமையையும் மிஞ்சிய ஒரு இளைஞனின் அசாத்தியமான லட்சியத்தை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. அந்தப் புகைப்படத்தில், ஒரு இளம் கிரிக்கெட் வீரர் முற்றிலும் கிழிந்த மற்றும் தேய்ந்து போன கையுறைகளை அணிந்து கொண்டு தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபடுவதைக் காண முடிகிறது.

மேலும் கையில் போதுமான வசதிகள் இல்லாவிட்டாலும், அவரது கண்களில் இந்திய தேசிய அணிக்காக விளையாட வேண்டும் என்ற உறுதியான கனவும், ஓயாத உழைப்பும் தெரிகிறது. இந்த மன உறுதி, சமூக வலைதளப் பயனர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இளைஞனின் ஆர்வத்தைக் கண்ட நெட்டிசன்கள், அவரைப் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Deepankar Singh (@deepankar.singh.5454)

“>

இதனால் “இன்று கிழிந்த கையுறைகளுடன் போராடும் இந்த இளைஞன், நிச்சயமாக ஒரு நாள் இந்திய அணியின் சீருடையில் ஜொலிப்பார்” என்றும், “இன்று இவரைப் பார்த்து வியக்கும் நாம், எதிர்காலத்தில் இவரிடம் ஆட்டோகிராப் வாங்க வரிசையில் நிற்போம்” என்றும் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். தடைகளைத் தகர்த்தெறியும் இத்தகைய இளைஞர்களின் ஊக்கம்தான் உண்மையான வெற்றியின் அடித்தளம் என்பதை இந்தப் புகைப்படம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.