சென்னை பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் மற்றும் பட்டய படிப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள 73 துறைகளின் கீழ் 93 முதல் பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. அதேசமயம் 25 பட்டய படிப்புகள், 29 சான்றிதழ் படிப்புகளும் கற்றுத் தரப்படுகிறது.

இவற்றில் வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்த படிப்புகளில் சேர்வதற்கான இணையதள விண்ணப்ப பதிவு இன்று  ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும் படிப்புகளின் விவரம் மற்றும் கல்வி கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.