அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஜெனிபர், திருமானூர் அஞ்சலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இன்று காலை வழக்கம்போல் வீட்டில் இருந்து அலுவலகத்திற்குப் போகும் போது, இருசக்கர வாகனத்தில் சென்ற b அதே வழியில் வந்த டாடா ஏஸ் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஜெனிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருக்கு இன்னும் இரண்டு தினங்களில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கின்றது, ஜனவரி மாதத்தில் திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணத்திற்கு தயாராகி வந்த இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
