இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட், டிமேட் கணக்குகள் மற்றும் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் கணக்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு நாமினியை இணைப்பது கட்டாயம் என தெரிவித்துள்ளது. நாமினிகளை இணைக்காவிட்டால் கணக்குகள் முடக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு செப்டம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் பலரின் கோரிக்கையை ஏற்று டிசம்பர் 31ஆம் தேதி வரை நாமினிகளை இணைப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டது.

தற்போது பான் கணக்கு வைத்திருக்கும் நபர்களில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் நாமினியை பதிவு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2024 ஆம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை நாமினிகளை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை நாமினிகளை இணைக்காத முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.