இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில அரசு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் அரிசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

அதன்படி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதாவது 2024 முதல் 2028 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அரிசியை பயனாளிகளுக்கு உரிய முறையில் விநியோகிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது