VPN இல்லாமல் ஐபி அட்ரஸை மறைக்கும் அம்சத்தை குரோம் பிரவுசரில் கொண்டு வரப் போவதாக கூகுள் அறிவித்துள்ளது. IP அட்ரஸ் மூலம் ஒருவர் பிரவுசரில் என்னென்ன தேடுகிறார் என்பதை கண்காணிக்கலாம். இருந்தாலும் VPN உதவியால் உண்மையான ஐபிக்கு பதிலாக ப்ராக்சி ஐபி அட்ரஸை பயன்படுத்தலாம். இந்த தொழில்நுட்பத்தால் ஒருவரை கண்காணிப்பது கடினமாகும். இந்த புதிய வசதியை கூகுள் அமெரிக்காவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.