இந்தியாவில் மாணவர்களுடைய கல்வியை ஊக்குவிக்கும் விதமாகவும்,மாணவர்கள் இடைநிற்றல்இல்லாமல் கல்வி தொடரும் விதமாகவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் வாயிலாக மாணவர்கள் கல்வியை தொடர்ந்து பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட நிலையில் இந்த திட்டத்திற்காக மாநில அரசு 16.1 கோடியை செலவு செய்துள்ளது.

தற்போது அந்த மாநிலத்தின் கல்வி மேம்படுத்துவதற்கு மாநில அரசு அயராது உழைத்து வருவதாகவும் அடுத்த வருடம் முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்படும் எனவும் அம் மாநில முதல்வர் ஹிமந்த் விஷ்வா சர்மா தெரிவித்துள்ளார்.