ஜார்கண்ட் மாநிலத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு பென்ஷன் வழங்குவதில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது 50 வயதை எட்டும் நபர்களுக்கு விரைவில் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநில மக்களுக்கு இதற்கு முன்பு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 1.30 லட்சம் கிடைத்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் இரண்டு லட்சம் பேர் பயன் பெறுவார்கள். இந்த திட்டம் உங்கள் அரசு மற்றும் உங்கள் கதவு திட்டம் முகாமில் 30 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அரசு தெரிவித்தது.

குடிமக்கள் வாங்கும் பொருட்களில் உள்ள வரிப்பணம் மத்திய அரசுக்கு மட்டுமே செல்வதாகவும் இதனால் மாநிலத்தில் உள்ள ஏழை மக்கள் இருளில் வாழ்வதாகவும் அம் மாநில முதல்வர் தெரிவித்தார். இதனால் முதியோர் ஓய்வூதியம் கிடைக்காமல் பலரும் உயிரிழந்த நிலையில் அதன் பிறகு அறுபது வயதில் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது முதியோர் ஓய்வூதியம் 50 வயதிலேயே வழங்கப்படும். பல மாநிலங்களிலும் மூத்த குடிமக்களுக்கு மாதம் தோறும் 300 ரூபாய் வரை ஓய்வூதியம் வழங்கப்படும் நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் சேர முதியோர்களின் வயது 60 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். அதனைப் போல விதவையின் வயது 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் பதிவு செய்ய நினைப்பவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தொகுதி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் பரிசீலித்த பிறகு தகுதியான பயனாளிகளுக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.