மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு நேரங்களில் கடைகள், ஓட்டல்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் செயல்படத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அரசிடம் புகார் தெரிவித்தனர். இந்த புகார்களை தொடர்ந்து, மாநில அரசு முக்கிய முடிவெடுத்து, மையமாக செயல்படும் நகரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்கள், திரையரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்து இயங்க அனுமதி அளித்துள்ளது.

இத்தகைய தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வாரத்திற்கு குறைந்தது ஒரு நாள் கட்டாய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த உத்தரவை சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய உத்தரவு மூலம் வணிக நடவடிக்கைகள் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.