உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ் அப்  பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் whatsapp பல அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில்  மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலி பல்வேறு புதிய வசதிகளைச் சோதித்து வருகிறது.

அந்த வகையில், இணைய வசதி இல்லாமல் படங்கள், வீடியோக்கள், ஆவணங்களைப் பகிரும் வசதியை வாட்ஸ் அப் சோதித்து வருகிறது. ப்ளூடுத்தைப் பயன்படுத்தி உருவாகி வரும் இந்தப் புதிய வசதி விரைவில் செயல்பாட்டிற்கு வரும் எனக் கூறப்படுகிறது. இந்த வசதியை செல்போனில் மட்டுமின்றிக் கணினிகளிலும் பயன்படுத்த முடியும்