இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளதால் அனைத்து ஆவணங்களுடனும் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தொடர்பான தரவுகள் அனைத்தும் அரசுடன் இணைக்கப்பட்டு வருகின்றது.

அதிலும் குறிப்பாக வங்கி வாடிக்கையாளர்களும் தங்களுடைய ஆதார் எண்ணை வங்கியில் கணக்குடன் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கி வாடிக்கையாளர்கள் பலரும் இதனை செய்யாமல் உள்ளனர். இந்த நிலையில் sbi வங்கி தனது வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டையை இணைப்பதற்கு ஆன்லைன் வழிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் எளிதில் வீட்டிலிருந்து கொண்டே தங்களுடைய சேவைகளை வாடிக்கையாளர்கள் செய்து முடித்து விடலாம்.

இதற்கு முதலில் எஸ்பிஐ வங்கியின் வங்கி கணக்குடன் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசியில் இருந்து எஸ்எம்எஸ் ஒன்றை வங்கிக்கு அனுப்ப வேண்டும்.

அதில் UID <SPACE> ஆதார் எண் <SPACE> கணக்கு எண்ணை உள்ளிட்டு பிறகு 567676 என்ற தொலைபேசி எண்ணுக்கு செய்தியை அனுப்ப வேண்டும்.

உங்கள் புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் பான் கார்டுடன் உங்கள் வங்கி கிளைக்குசென்று உங்கள் KYC சரிபார்ப்பை முடித்துக் கொள்ளலாம்.