இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து வங்கிகளுக்கும் விதிமுறைகளை அறிவித்து வருகின்றது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி நாட்டில் செயல்பட்டு வரும் பல வங்கிகளுக்கும் விதிமுறைகள் மீறல் தொடர்பான அபராதங்களை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் இரண்டு ஆண்டுகளாக தங்களுடைய கணக்கில் எந்த பரிவர்த்தனையும் செய்யவில்லை என்றால் இந்த கணக்குகள் முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் செயல்பாட்டில் இல்லாத கணக்குகளை உடனடியாக பரிவர்த்தனை செய்ய வேண்டும் எனவும் வங்கி கணக்கு செயலிழந்து விட்டால் வங்கிக்கு நேரில் சென்று இ கேஒய்சி சரிபார்ப்பை செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை தவிர்க்க உங்களது கணக்கில் பரிவர்த்தனை அல்லது இருப்பு தொகை குறித்து செயல்பாடுகளை சோதித்துக் கொள்ள வேண்டும் என வங்கி சார்பில் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.