பொதுவாக நாம் நம்முடைய செல்போனில் யூடியூபில் வீடியோக்களை பார்க்கும் பொழுது அதில் இடையிடையே விளம்பரங்கள் வரும். அதை பார்க்க விரும்பாத பட்சத்தில் ஸ்கிப் வீடியோ என்ற ஆப்ஷனை கொடுத்து அந்த விளம்பரத்தை ஸ்கிப் செய்து விடுவோம். இந்நிலையில் டிவியில் யூடியூப் பயன்படுத்தும் பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

டிவியில் யூடியூப் பார்க்கும்போது வரும் 30 வினாடி விளம்பரங்களை இனி ஸ்கிப் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை அடுத்தடுத்து இரண்டு 15 வினாடி விளம்பரங்கள் காண்பிக்கப்பட்டு வந்தது. தற்போது அது நிறுத்தப்பட்டு 30 வினாடி NON-SKIP விளம்பரங்களை காண்பிக்கப்பட உள்ளது. இந்த முறை விரைவில் அமலுக்கு வர இருக்கிறது.