பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனமான vodafone ஐடியா சமீபத்தில் மலிவு விலை ரீசார்ஜ் திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டம் வெறும் 45 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது சுமார் 180 நாட்களுக்கு செல்லுபடி ஆகும். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் மிஸ்டு கால் அலர்ட் சேவையுடன் அழைப்பு நன்மையும் வழங்குகிறது.

இந்த திட்டம் மொபைல் போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கும் போது அல்லது பிளைட் மோடில் இருக்கும் போது முக்கியமான அழைப்புகளை தவறவிடுபவர்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் இந்த திட்டம் அதன் வாடிக்கையாளர்களின் செய்தி அனுப்புதல், இணையம் அல்லது ஓடிடி சேவை போன்றவைகளை பயன்படுத்த அனுமதிக்காது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.