வோடோஃபோன் ஐடியா அண்மையில் மலிவு விலையில் ஒரு புது ரீசார்ஜ் திட்டத்தை தன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. வோடோஃபோன் ஐடியா இப்போது அறிமுகப்படுத்தி உள்ள இந்த ரீசார்ஜ் பிளான் வெறும் ரூ.45-க்கு கிடைக்கும்.

இந்த மலிவு விலை ரீசார்ஜ் பிளான் களத்தில் அதன் போட்டியாளர்களாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்கப் போகிறது. வோடோஃபோன் ஐடியாவின் இந்த புது ரூ.45 திட்டம் 180 நாட்கள் செல்லுபடி ஆகும்.

அதாவது சுமார் 6 மாதங்கள் ஆகும். ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பல சிறப்பான திட்டங்களை வழங்கி வரும் சூழலில், வோடோஃபோன் ஐடியாவின் இந்த மலிவு விலை ரீசார்ஜ் பிளான் சிறப்பானதாக கருதப்படுகிறது. மற்ற திட்டங்களுடன் ஒப்பிடுகையில் இத்திட்டம் சிறந்ததாக விளங்குகிறது.