திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் மார்க்கெட் அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பாளையங்கோட்டையை சேர்ந்த செல்வராஜ்(28) என்பவர் மது விற்பனை செய்துள்ளார். இதனால் சட்ட விரோதமாக மது விற்ற செல்வராஜை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 26 மது பாட்டில்களையும் , 536 ரூபாவையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று பாளையங்கோட்டை முருகன்குறிச்சி அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்த ஆறுமுகநயினார் என்பவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து அவரிடமிருந்து 27 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
