தமிழகத்தில் இனி மாணவர் சேர்க்கையின் போது காது கேளாதவர்கள்,வாய் பேச முடியாதவர்கள் மற்றும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வாக்கியங்கள் எதுவும் பயன்படுத்தக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பதிலாக மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரை மட்டுமே எந்த இடத்திலும் எதற்காகவும் பயன்படுத்த வேண்டும். மாணவர்களின் தனிப்பட்ட குறையை சுட்டிக் காட்டுவதை தடுக்கும் விதமாக தமிழக அரசு இந்த புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.

மேற்கண்ட வார்த்தைகளால் மாணவர்கள் குறிப்பிடப்படுவதால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால் மாணவர்களின் மன நிலைமையை கருதி இனி மாணவர் சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகள் என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.