பிறப்பு சான்றிதழ் என்பது மிக முக்கியமான ஆவணத்தில் ஒன்று. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா கடந்தாண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதன்படி, பிறப்பு பதிவேட்டில் இனி குழந்தையின் தாய், தந்தை என இருவரின் மதத்தையும் தெரிவிப்பது கட்டாயம் என உள்துறை அமைச்சகம் தற்போது தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, குடும்பத்தின் மதம் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் இனி இருவரின் மதத்தையும் குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.