2024-25 ஆம் ஆண்டின் முதல் நாணய கொள்கை கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் ரெப்போ வட்டி விகிதம் தொடர்பான ஆலோசனைக்கு பிறகு பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் ஏடிஎம் இயந்திரத்தில் UPI மூலமாக பணம் டெபாசிட் செய்யப்படும் வசதி கொண்டுவரப்படும் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே இருக்கும் பணம் அனுப்பும் வழிமுறைகளுடன் UPI செயல்முறையும் புதிதாக இணைக்கப்படும் எனவும் இதை தவிர யூபிஐ மூலமாக மூன்றாம் தரப்பு செயலைகள் கட்டணத்திற்கு அனுமதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ருமென்ட் வாலட்டுகள் மூலம் UPI பணம் செலுத்தும் வசதியே இது வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.