இந்தியாவில் தற்போது பல மாநிலங்களிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அசாம் மாநிலத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களும் ஆடை கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்று தற்போது அசாம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலரும் தங்களுக்கு விருப்பமான டி ஷர்ட், ஜீன்ஸ் மற்றும் லெக்கின்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து வருவதாகவும் இது போன்ற ஆடைகள் ஒரு சில நேரங்களில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆசிரியர்கள் மாணவர்களின் அனைத்து விதமான கண்ணியத்திற்கும் உதாரணமாக இருக்க வேண்டும் எனவும் கண்களை உருகாத வண்ணங்களில் தொழில்முறை மற்றும் கண்ணியம் மிக்க அலங்காரம் இல்லாத வகையிலான ஆடைகளை அணிய வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. எனவே ஆண் ஆசிரியர்கள் முறையான பேண்ட் சட்டை அல்லது வேஷ்டி பைஜாமா அணிந்து கொள்ள வேண்டும் எனவும் பெண் ஆசிரியர்கள் கண்ணியமிக்க சல்வார் சூட், சேலை மற்றும் பாரம்பரிய உடைகளில் பணிக்கு வர வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.