நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, நான் இந்த நேரத்தில் எதிர்க்கட்சி கூட்டகளுக்கு  என்னுடைய மன வேதனை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் பெங்களூரில் ஒன்று சேர்ந்து 20 ஆண்டுகளுக்கான ஒரு கூட்டணிக்கு கடைசி காரியம் செய்திருக்கிறீர்கள். ஜனநாயக முறைப்படி எனக்கு உங்கள் மீது சோகம்,  வேதனை ஏற்படுகிறது.ஆனால் நேரமானது என்னுடைய தவறல்ல. நீங்கள் ஒரு புறத்தில் UPA_க்கு கடைசி காரியங்களை செய்து வந்து கொண்டீர்கள், மறுபுறம் கொண்டாடுனீர்கள்.

கொண்டாட்டம் எதற்காக ? புதிய பெயிண்ட் அடித்ததற்காக…. புதிய எண்ணைய் பாத்திரத்திற்கு புதிய பெயிண்ட் அடித்ததற்காக நீங்கள் கொண்டாடி கொண்டிருந்தீர்கள். பல ஆண்டுகளாக ஓடாத ஒரு வண்டியை எலெக்ட்டிக்கல் வண்டியாக மாற்றுவதற்கு பெரும் கொண்டாட்டம் கொண்டாடி  கொண்டிருந்தீர்கள். அதற்கு என்ஜின் பொருத்துவதற்கு முன்னதாகவே,  கொண்டாட்டங்களை ஆரம்பித்து விட்டீர்கள்.

இந்த கூட்டணியை வைத்துக்கொண்டு நீங்கள் மக்கள் மத்தியில் செல்வீர்களா ? செல்ல முடியுமா ? நீங்கள் யாருக்கு பின்னால் சென்று கொண்டிருக்கிறீர்களோ… எதிர்க்கட்சி கூட்டணிக்கு நான் சொல்ல விரும்புகிறேன். யாருக்கு பின்னால் நீங்கள் சென்று கொண்டிருக்கிறீர்களோ….  அவர்களை இந்த நாட்டின் இளைஞர்கள் நம்பவில்லை. இவர்களுக்கு பச்சை மிளகாய்க்கும்,  சிகப்பு மிளகாய்க்கும்   உள்ள வித்தியாசம் தெரியாது என தெரிவித்தார்.