மாநிலங்களவை தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அனுராக் தாகூர் ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் மசோதாவை தாக்கல் செய்தார். மசோதா தொடர்பான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அவர் திரைப்படங்களை திருட்டுத்தனமாக பிரதி எடுத்து வெளியிடுவதால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். திரைப்படத் திருட்டு புற்றுநோய் போன்றது என்றும் இதனை வேரோடு அழிக்க இந்த மசோதா வழி செய்யும் என்றும் கூறியுள்ளார்.

தியேட்டரில் வெளியான படங்களை திருட்டுத்தனமாக பிரதி எடுப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் படத்தின் தயாரிப்புக்கு ஆன செலவில் 5 சதவீதத்தை அபராதம் விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது. மேலும் திரைப்படங்களுக்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் யுஏ சான்றிதழ் வழங்கும் போது அதை வயது வாரியாக யுஏ 7 பிளஸ், யு ஏ 13 பிளஸ் மற்றும் யுஏ 6 பிளஸ் என மூன்று பிரிவுகளாக வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.