தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொசுக்களை ஒழிப்பதற்கு கொசு மருந்து அடிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், அதனை அரை மணி நேரத்தில் அறிந்து கொள்ளும் வகையில் 620 பரிசோதனை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 1,830 ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற சுகாதார நிலையங்களை ஒருங்கிணைத்து பரிசோதனை கருவிகளை அரசு வழங்கியுள்ளது. 23,000 மருத்துவ பணியாளர்கள் டெங்கு தடுப்பு சிறப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.