பொதுவாக இன்றைய காலகட்டத்தில் செல்போன் யுகமாகவே மாறி வந்தாலும் தொலைக்காட்சி அதற்கு ஈடாக தகவல்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் சீரியல்கள் உள்ளிட்ட பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கி மக்களிடையே இன்னும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொலைக்காட்சியில் உள்ள நிகழ்ச்சிகளை காண செட்டப் பாக்ஸ் தேவைப்படுகிறது. இந்நிலையில் செட்டப் பாக்ஸ் இல்லாமலும் டிவி பார்க்க முடியும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

200க்கும் மேற்பட்ட ட்யூனர்கள் டிவிகளில் சேனல்களை வழங்க, உள் செயற்கைக்கோள் நிறுவப்படுகின்றன. இதன்மூலம், இலவச சேனல்களை டிவி-களில் நேரடியாக பார்க்கலாம். இந்த டிவிகளை வாங்கி, அதனுடன் உள்ள ஆன்டனாவை வீட்டின் கூரையில் பொருத்தினால், இலவச டிவி சேனல்கள் மற்றும் ரேடியோ சேனல்களை பெறலாம்.