சமீப காலமாகவே திருநங்கைகளுக்கும் பல சலுகைகளையும், இட ஒதுக்கீடுகளையும் மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது .அந்த வகையில் தற்போது பஞ்சாப் மாநில முதல்வர் அம்மாநிலத்தில்  காவல் துறையில் திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் போன்ற முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதாவது 2019 ஆம் வருடம் திருநங்கைகள் சட்டம் அமல்படுத்த உள்ளதாகவும் இதற்கான கொள்கையை உருவாக்கியதாகவும் கூறினார்.

.மேலும்  திருநங்கைகளுக்கு காவல்துறை  பணியில்  சம வாய்ப்பு வழங்குவதற்கான மற்ற ஒதுக்கப்பட்ட பிரிவினரை போல திருநங்கைகளுக்கும் சலுகைகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இதன்படி விண்ணப்பிக்கும் திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரின் சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.