இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்ட நிலையில் ஆதார் அட்டையில் உங்களுடைய விவரம் ஏதாவது தவறாக இருந்தால் சிக்கல் ஏற்படும்.

எனவே அடிக்கடி அதனை அப்டேட் செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் ஆதார் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது நீங்கள் வீட்டிலிருந்து படி ஆன்லைன் மூலமாக மாற்றலாம். உங்களின் பிறந்த தேதியை ஆன்லைனில் மாற்றுவதற்கு ஆதார அமைப்பின் myaadhaar.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று உங்களின் ஆதார் எண் மற்றும் கேப்சா குறியீட்டை உள்ளிட வேண்டும். அதன் பிறகு ஓடிபி விருப்பத்தை தேர்வு செய்ததும் தொலைபேசி எண்ணிற்கு வரும் ஓடிபியை உள்ளிட வேண்டும்.

அதன் பிறகு update aadhar என்பதை கிளிக் செய்து பிறந்த தேதி ஆப்ஷனை கிளிக் செய்து மாற்றப்பட வேண்டிய பிறந்த தேதியை கொடுக்க வேண்டும். அதில் கேட்கப்படும் ஆவணங்களை சமர்ப்பித்து பிறகு கேட்கப்படும் அனைத்து அசல் ஆவணங்களையும் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை பதிவேற்ற வேண்டும். இறுதியாக ஐம்பது ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதன்பிறகு பிறந்த தேதியை மாற்றும் செயல்முறை முடிவடைந்து விடும்.