தெலுங்கானா மாநிலத்தில் சமூக நல குடியிருப்பு கல்வி நிறுவனங்கள் சங்கம் மற்றும் தெலுங்கானா பழங்குடியினர் நல குடியிருப்பு கல்வி நிறுவனங்கள் சங்கம் நடத்தும் பள்ளிகளில் பிரஞ்சு மொழி அறிமுகம் செய்ய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் பிரெஞ்சு கல்வி நிறுவனத்தின் ஆதரவுடன் அரசு பள்ளிகளில் பிரெஞ்சு மொழியில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி முதல் கட்டமாக இருவது பள்ளிகளில் இது அறிமுகப்படுத்தப்படும் என்றும் மாணவர்களின் ஆர்வத்தை பொறுத்து மற்ற பள்ளிகளுக்கும் இதை விரிவு படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் ஐந்து முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் நடத்த பிரஞ்சு நிறுவனம் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு உலகளாவிய கற்றல் வாய்ப்புகளுக்கான அணுகலை பெற இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.