தமிழகத்தில் போக்குவரத்து துறையில் பேருந்துகள் அனைத்தும் மிகவும் பழுதடைந்து இருப்பதால் பயணிக்கும் மக்களுக்கு விபத்துக்கள் மற்றும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மாநிலத்தில் புதிய பேருந்துகளை வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு நல்ல நிலையில் உள்ள பேருந்துகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

அதே சமயம் தமிழக நகர பேருந்துகள் மஞ்சள் வண்ணங்களில் இயங்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 500 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு இந்த பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும்போது புதிய வண்ணங்களில் வர உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிய பேருந்துகளுக்கான வண்ணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்த பிறகு புதிய நிறம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். எனவே இனி தமிழகத்தில் பல வண்ணங்களில் பேருந்துகள் செயல்படும் என தகவல் வெளியாகி உள்ளது.