தமிழகத்தில் விவசாயிகளின் நலனுக்காக முதல்வர் ஸ்டாலின் பல திட்டங்களை அமல்படுத்தி வரும் நிலையில் தற்போது விவசாயிகளின் நலனை கருதி நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் தமிழக அரசு ஊக்கத்தொகையை சேர்த்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புதிய ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத்தொகை என இரண்டும் சேர்த்து இன்று செப்டம்பர் 1ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதாவது சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு 82 ரூபாய், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 107 ருபாய் கூடுதல் ஊக்கத்தொகையாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் சாதாரண நெல் குவிந்டால் ஒன்றுக்கு 2265 ரூபாய், சண்ணரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2310 ரூபாய் எனவும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.