உலகம் தற்போது நவீனமயமாகி வருவதைப் போல குற்றங்களும் அதற்கு ஏற்றார் போல அப்டேட் ஆகி வருகிறது. பொதுமக்களுடைய அறியாமையை பயன்படுத்தி பலரும் பலவிதமான மோசடிகளை இறங்கி வருகிறார்கள். இணைய வழி குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒருவருடைய அனுமதி இல்லாமல் பணத்தை தருவது திருடுவது சாதாரணமாகி வருகிறது. இ-செலான்  மோசடியை சைபர் கிரைம் திருடர்கள் தொடங்கி இருப்பதாக சென்னை மாநகர போலீஸ்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது போக்குவரத்து போலீஸ் போன்று குறுஞ்செய்தி அனுப்பி பணம் மோசடி செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறையினர் echallan.parivahan.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்துவார்கள் என்று இது குறித்து போக்குவரத்து போலீஸ் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் சைபர் கிரைம் மோசடி கும்பல் https://echallanparivahan.in/ என்ற மோசடி இணையதளத்தின் மூலமாக தனியாக ஈமெயில் மற்றும் பணம் செலுத்துமாறு கோரி மோசடி செய்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.