இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் போக்குவரத்தை விதிமீறலுக்கான அபராத ரசிது லிங்குகளை போலியாக அனுப்பி ஒரு கும்பல் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தெரியாத எண்களில் இருந்து வரும் லிங்கை கிளிக் செய்தால் நமது வங்கி கணக்கு ஹேக் செய்யப்பட்டு பணம் திருடப்படும் எனவும், போக்குவரத்தை விதிமுறைகளுக்கான அபராதம் செலுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.