இந்தியாவில் உள்ள பல வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் ஓவர் டிராப்ட் வசதி. உங்களுடைய வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டால் இந்த வசதியை பயன்படுத்தி அதில் இருந்து நீங்கள் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். இந்த வசதி அரசு மற்றும் தனியார் வங்கிகளால் வழங்கப்பட்டு வரும் நிலையில் வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு அல்லது நடப்பு கணக்குடன் ஓவர் டிராப்ட் வசதி இணைக்கப்பட்டுள்ளது. பணம் பெறுவதற்கான வரம்பு வங்கியை பொறுத்து வாடிக்கையாளர்களை பொறுத்து வெவ்வேறாக இருக்கக்கூடும். இந்த வசதியின் கீழ் நீங்கள் எடுத்த தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

இந்த வசதியை பயன்படுத்தும் வாடிக்கையாளர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் எனவும் அவரது வயது 21 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓவர் டிராப்ட் வசதிக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு செயலாக கட்டணத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சில வங்கிகளின் இந்த சேவைக்கு செயலாக கட்டணத்தை வசூல் செய்கின்றன. சில வங்கிகள் முன்ன அனுமதி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.