இந்தியாவில் வங்கி சேமிப்பு திட்டங்களை விட பொதுமக்கள் அனைவரும் அஞ்சலக திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பெற்றோர்கள் பலரும் குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்து சேமிக்க ஆர்வம் காட்டி வருவதால் பெண் குழந்தைகளுக்காக சேமிக்க செல்வமகள் சேமிப்பு திட்டம் இருப்பதைப் போல ஆண் பிள்ளைகளுக்காகவும் செல்வ மகன் சேமிப்பு திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் பத்து வயது பூர்த்தி அடைந்த ஆண் மகனின் பெயரில் சேமிக்கலாம்.

பத்து வயதுக்கு முன்பாக குழந்தையின் பெயரில் கணக்கு தொடங்க விரும்பினால் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரில் கணக்கு தொடங்கிக் கொள்ளலாம். அதன் பிறகு குழந்தைக்கு பத்து வயதானதும் குழந்தையின் பெயரில் மாற்றிக் கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் இந்த திட்டத்தின் கீழ் குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை முதலீடு செய்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் ஆண்டு வட்டியாக பொன்மகன் சேமிப்பு திட்டத்திற்கு 8.5% வட்டி வழங்கப்படுவது மட்டுமல்லாமல் முதலீடு செய்த தொகையை படிப்பு செலவு அல்லது பிற செலவுக்களுக்காக கணக்கு தொடங்கப்பட்ட 15 வருடங்களுக்குப் பிறகு வட்டியுடன் சேர்த்து பெற்றுக் கொள்ள முடியும்.