இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் பெண்களுக்கும் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் பெண்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கோவையில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களைச் சேர்ந்த 622 மகளிருக்கு ரூ.1,000 பெறுவதற்கான ஆணைகள், ஏடிஎம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, மகளிர் உரிமைத் தொகையை பொறுத்தவரை தமிழ்நாட்டில் சுமார் 1 கோடியே 8 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதிகளின் இந்தத் தொகை அவரவர் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.