இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்படுகிறது. இந்த வங்கி தற்போது MCLR எனப்படும் வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. இதன் வட்டி ஒரு வருடத்திற்கு 8.30 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 8.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் கணிசமான அளவில் உயரும். அதோடு floating வட்டியை கொண்ட அனைத்து விதமான கடனின் வட்டியும் உயரும். மேலும் இந்த அறிவிப்பு எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.