விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வி .சாலையில் விமர்சையாக நடைபெற்றது. விஜய் தனது கட்சி கொடி விளக்கம், கொள்கைகள், மக்களின் நலன், அரசியல் முன்னோடிகள் என அனைத்தை பற்றியும் பேசினார். விஜய் பேசியதாவது, 2026-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக வெற்றி கழகம் பெரும் வாக்குகள் ஒவ்வொன்றும் அணுகுண்டாக மாறும்.
திராவிட மாடல் ஆட்சி என மக்களை ஏமாற்றுகிறீர்கள். என்னதான் எங்களுக்கு நீங்கள் வர்ணம் பூசம் முயன்றாலும், மோடி மஸ்தான் வித்தை காட்டினாலும் அது எடுபடாது. பிளவுவாத அரசியல் நமது சித்தாந்த எதிரி. பெரியார் அண்ணா பெயரை சொல்லி கொள்ளையடிக்கும் ஒரு குடும்பம் நமது அரசியல் எதிரி என பேசியுள்ளார்.
