இந்தியாவைப் பொறுத்த வரையில் அதிக அளவிலான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். அதனால் எப்போதும் ரயில்களில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. அதேசமயம் அவ்வப்போது பயணிகளின் பாதுகாப்பை கருதி ரயில்வே விதிகளும் மாற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் தொடர் வன்முறையில் ஈடுபட்டால் இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே டிஎஸ்பி ரமேஷ் எச்சரித்துள்ளார். செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் பகுதிகளில் இருந்து சென்னைக்கு மின்சார ரயில்களில் வரும் கல்லூரி மாணவர்கள் ரூட் தல விவகாரத்தில் மோதலில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.