இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் ஓட்டுநர் உரிமம் மற்றும் பான் கார்டு ஆகிய ஆவணங்களும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் தேர்தல் நடைபெற்ற போது நபர் ஒருவர் போலியான ஆதார் கார்டு மற்றும் ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்திய நிலையில் அந்த ஆதார் அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்ட அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் அந்த நபர் பயன்படுத்திய ஆதார் கார்டு மற்றும் ஓட்டுநர் உரிமம் இரண்டும் அரசால் செய்யப்பட்ட ஆவணங்கள் என உறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தவறான தகவலை வைத்து ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் கார்டு வழங்கிய துறையின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தவறான ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆதார் கார்டு வைத்து இது போன்ற பயன்படுத்தினால் அந்த நபரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.