ரேஷன் கார்டில் குடும்ப தலைவிகளின் பெயர் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது கடந்த சில வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்தாலும் இதுவரை ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் பிறப்புச் சான்றிதழ் போன்ற அரசு ஆவணங்கள் அனைத்திலும் உரிமையாளரின் தந்தை பெயர் மட்டுமே இடம் பெற்று வந்தது. இதில் தாயின் பெயரை இணைப்பது குறித்து அரசு ஆலோசனை செய்து வருகின்றது. இந்த நிலையில் பொதுமக்கள் மத்தியில் இனி தந்தை பெயரை சேர்ப்பது அவசியமா என்று குழப்பம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இவை அனைத்திற்கும் பதில் அளிக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநில அரசு புதிய விதிமுறையை வெளியிட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ், பள்ளி ஆவணங்கள் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட அரசு ஆவணங்களில் தாயின் பெயரும் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். அதாவது தந்தையின் பெயருடன் தாயின் பெயரும் அரசு ஆவணங்கள் அனைத்திலும் இடம்பெற்று இருக்க வேண்டும் எனவும் இது வருகின்ற மே 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.