கர்நாடக மாநிலத்தில் ரேஷன் கார்டுகளை திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தல் காரணமாக இந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அன்ன பாக்யா யோஜனா மற்றும் பிற அனைத்து திட்டங்களிலும் பயன்பெறுவதற்கு முக்கியமாக ரேஷன் கார்டு என்பது உள்ளது. அன்ன பாக்கியா யோஜனா திட்டத்தின் கீழ் இந்த வருடம் அரிசி மற்றும் மக்காச்சோளம் வழங்கப்படுகிறது. புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க குடும்ப உறுப்பினர்களுடன் சென்று பெங்களூரு ஒன், கர்நாடகா ஒன், ஜனஸ்நேகி கேந்திரா, கிராம பஞ்சாயத்து, பிஓஎஸ் அலுவலகம் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பயோமெட்ரிக் கட்டாயம் வேண்டும். அதற்கு மேல் உள்ளவர்களுக்கு பயோமெட்ரிக்ஸ் தேவையில்லை. அவரின் ஆதார் அட்டை கட்டாயம் இருக்க வேண்டும். அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்ட ரேஷன் கார்டு விண்ணப்பதாரருக்கு ஸ்பீடு போஸ்ட் மூலமாக புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். புதிய ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு நாப்பது நாட்களில் பணி முடிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.